கற்பனை ஒரு கிருக்கல்
வழியே சென்று கொண்டிருந்தபோது ஒருவர் என்னை கூப்பிட்டு இன்னொருவருக்கு எழுத சொன்ன கடிதம்... வக்கிர புத்தி கொண்ட மனிதன் நானே சுயநலம் பொதுநலம் இல்லாமல் தனக்காக வாழ நினைக்கும் ஒரு மனிதப்பிறவி நானே உன்னைப்போல் நான் இல்லை என்னைப் போல் நீ இல்லை ஆனால் விதிகள் எல்லாருக்கும் ஒன்று போல தானே ஏன் அதை மறுக்கிறாய் ஏன் அதை திருத்த நினைக்கிறாய் உனக்காக சுயநலமாக அதை செய்துவிட்டு சரி என்று ஆணையிடுவது முறையா ஒருவன் கூறிய விஷயத்தை ஆதாரம் இருந்தும் வார்த்தைகளை வைத்து திருத்தி மாற்றி கூறுவது சரியா என் வார்த்தையை மாற்றுவதற்கு நீ யார் உன் ஆதாயத்துக்கு சுயநலத்துக்கு மாற்றுவது சரியா நான் இல்லாத போது இருந்திருந்தால் தடுத்திருப்பேன் அடுத்தவன் மண்பாண்டத்தை எடுத்து திருத்தி வடிவமைத்து உபயோகிப்பது சரியா உன் வேலையும் அதே போல்தான் இருக்கின்றது கண்டவன் கண்மறைத்து கேட்டவன் காதடைத்து சொன்னவன் வார்த்தை அடைத்து கட்டிங்கை வாங்கிக் கொண்டு மூடிமறைத்து கதைக்கு கதை மாறும் ஆளுக்கு ஆள் மாறும் விஷயத்துக்கு விஷயம் மாறும்
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
No comments