கற்பனை ஒரு கிருக்கல் 6
அழகான வாழ்க்கை அழகான நாடு சுற்றித்திரிந்தேன்
பல வண்ண
டீக்கடையில் பேப்பர் படித்து ஊர்கதை கேட்டு
உலகக்கதை கேட்டு டீ குடித்து நடந்தேன் மேடு பள்ளம் கடந்து பேருந்து
நிறுத்தத்தில் நின்றேன் பஸ்ல போயிட்டு இருக்கும்போது ரேஷன் கடையில ரேஷன்
வாங்கிட்டு இருக்குற தலைவரை பார்த்து வணக்கம் தலைவரேன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கேன் பஸ்ல இருந்து இறங்கின உடனே
அங்க ஒரு சண்டை நடந்துட்டு இருக்கு மனசு போய் பாக்கலாமா வேண்டாமான்னு யோசிச்சுட்டு
இருக்கு அப்போ அந்த பக்கம் ஒரு டிரெய்ன்
போயிட்டு இருக்கு நான் திரும்பி பாத்துட்டு டிரெய்ன் போற திசையை நோக்கி நானும் நடந்து
போயிட்டு இருக்கேன் கிட்ட ஒரு சத்தம் பயந்து பார்த்தா தென்னை மரத்தில் இருந்து தம்பி
பாத்துப்பா தேங்கா வெட்டி போடுறேன் சரி அண்ணா சரி அண்ணா சொல்லிட்டு தாண்டி கொஞ்ச
தூரம் போன உடனே ரயில்வேஸ்டேஷன் வந்துட்டு
ஒரே பரபரப்பா இருக்கு டிக்கெட்
வாங்கிட்டு வந்துட்டு டிரெய்ன் வந்த உடனே ட்ரைன்ல ஏற பின்னாலன்னு ஒரு
சத்தம் தம்பி நில்லுப்பா
திரும்பி பாத்தா போலீஸ் உடனே வேர்த்து விட்டது என்னுடைய
பை வாங்கி செக் பண்றாரு பண்ணி முடிச்ச உடனே நீ போனான்னு சொல்லிட்டாரு இடம் வந்தஉடனே இறங்கி
நடந்து போயிட்டு இருக்கேன் ஒரு கடைல டிவி நியூஸ் ஓடிட்டு இருக்கு ரயில்வே ஸ்டேஷன்ல வெடிகுண்டு மிரட்டல் அதான்
சோதனையான்னு நெனச்சி பாத்துட்டு போயிட்டு இருக்கேன்
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
No comments